இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதி விபத்து - 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி...!

Asianet News Tamil  
Published : Sep 26, 2017, 08:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதி விபத்து - 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி...!

சுருக்கம்

bus and bike accident in sivangangai and two people death

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பேருந்தை ஓவர் டேக் செய்ய முயன்றுள்ளனர். 

அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துகுள்ளானது. 

இதில், இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!