தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.. பிளஸ் 2 மாணவன் துடிதுடித்து பலி.. திண்டுக்கல் அருகே பயங்கரம்..

By Thanalakshmi VFirst Published Sep 7, 2022, 6:35 PM IST
Highlights

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் அரசு பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள், நடத்துனர் மற்றும் ஒட்டுநர் உயிர் பிழைத்துள்ளனர். 
 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் அரசு பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள், நடத்துனர் மற்றும் ஒட்டுநர் உயிர் பிழைத்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது, அதிவேகத்தில் வந்த பைக் ஒன்று கட்டுபாட்டை இழந்து பேருந்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 12 ஆம் வகுப்பு மாணவன் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க:பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் எப்போது தொடங்கி வைக்கிறார் ? வெளியான தகவல்!

முன்னதாக பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் மோதியதில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதிவேகமாக எரிந்த தீ, பேருந்துக்கும் பரவியது. இதனால் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசாமானது. முன்கூட்டியே நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டதால், உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.

பேருந்து பயங்கரமாக தீப்பிடித்து எரிந்ததால், அந்த இடம் முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்து நடந்த இடம் மேம்பாலம் என்பதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திது.

மேலும் படிக்க:சென்னை பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்... காரணம் இதுதான்!!

click me!