சென்னை பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்... காரணம் இதுதான்!!

Published : Sep 07, 2022, 04:38 PM IST
சென்னை பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்... காரணம் இதுதான்!!

சுருக்கம்

பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 7 ஆம் தேதி  அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் அன்னையின் திருத்தேர் கடற்கரை சாலையில் வலம் வரும்.

இதையும் படிங்க: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடம் .. ரூ.18,536 தொகுப்பூதியத்தில் சூப்பர் வேலை.. விவரம் உள்ளே

இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அந்த வகையில் இன்று அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வடபழநி முருகன் கோவிலில் ரூ.60,000 சம்பளம் வரை வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..விவரம் உள்ளே

பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எல்.பி. சாலை வழியாக செல்லலாம். திருவிக பாலம் வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல எல்பி சாலை வழியாக செல்லலாம் மற்றும் எம்ஜி ரோடு சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் செல்ல அனுமதி இல்லை. எம்எல் பூங்காவில் இருந்து பெசன்ட் நகர் வழியாக பேருந்து நிலையம் செல்ல மாநகர பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 16 January 2026: தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்
சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!