
சிவகங்கை
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக வழங்காமல் உள்ள சம்பளத் தொகையை உடனே வழங்க கோரி சிவகங்கையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு என்எப்டிசிஎல் சங்கத்தின் மாவட்டச் செயலர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் தர்மராஜ்,பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், "காரைக்குடி மண்டலத்திற்கு உள்பட்ட பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 160-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக வழங்காமல் உள்ள ரூ.40 இலட்சத்திற்கும் மேலான சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள்து கோரீக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிஎஸ்என் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.