
தஞ்சாவூர்
கும்பகோணத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் குருசாமி, சீனிவாசன் ஆகியோர் தலைமைத் தாங்கினர்.
இதில், “பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்
ஓய்வூதிய பங்கீட்டை அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட வேண்டும்,
நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும்,
பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் கும்பகோணத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.