தமிழ் பற்றாளர் வீர சந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில்  மரணம்

 
Published : Jul 14, 2017, 05:52 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
தமிழ் பற்றாளர் வீர சந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில்  மரணம்

சுருக்கம்

artist veerasanthanam expired

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த  ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.அவருக்கு வயது 71.

தமிழ் மக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரிந்த மக்கள் கலைஞன் 71 வது வயதில் மறைந்துள்ளார். கும்பகோணம் ஓவிய பள்ளியில் படித்து, மும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனராக பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து, தமிழ் இனத்துக்காகப் போராட வேண்டும் என்ற நோக்கோடு விருப்ப ஓய்வில் வெளியேறினார்.

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத் தமிழர்களின் நினைவகம் இவரது ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஓவியங்கள் மட்டுமல்லாது பீட்சா, கத்தி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பையும் வீரசந்தானம் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, தமிழர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொண்டார். ஆனால் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மரணமடைந்தார்.

“டாஸ்மாக்கை, மக்கள் இழுத்து மூடுவதில் இருந்து அடித்து நொறுக்கும் எண்ணத்துக்கு வந்திருக்காங்க. அந்த எண்ணம் தீவிரம் அடையறதுக்குள்ள அரசாங்கமே டாஸ்மாக்கை மூடணும்; தமிழினத்தைக் காப்பாத்தணும்!” என்பதுதான் அவரின் கடைசிக்கால கோரிக்கையாக இருந்தது,

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!