ஐயோ சாமி.. கல்யாணம் பண்ண ஏழு நாள்ல என்னை விட்டு போயிட்டியே.. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி..!

By vinoth kumar  |  First Published Nov 16, 2022, 9:18 AM IST

தென்காசி மாவட்டம் ஆனைகுளத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகன் கலையரசன்(27) கடையநல்லூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 7ம் தேதி திருமணம் நடந்தது.


திருமணமான 7 நாட்களில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் திறந்த செய்தியை அறிந்த மனைவி கதறி துடித்த சம்பவம் காண்போரின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. 

தென்காசி மாவட்டம் ஆனைகுளத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகன் கலையரசன்(27) கடையநல்லூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 7ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு எடுத்த விடுமுறை முடிந்து கலையரசன் மீண்டும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல கலையரன் பணிக்கு சென்ற போது இவரது இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- என் மகளை கொன்னுட்டாங்க.. அவங்கள சும்மா விடாதீங்க.. கதறும் பிரியாவின் தந்தை..!

இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கலையரன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 நாட்களே ஆன நிலையில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க;- கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை... தாயும் குழந்தையும் உயிரிழப்பு... திண்டிவனத்தில் நிகழ்ந்த சோகம்!!

click me!