Published : Nov 25, 2023, 07:17 AM ISTUpdated : Nov 25, 2023, 09:55 PM IST

Tamil News Live Updates: கம்பி கட்டும் கதை கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ்.. அண்ணாமலை

சுருக்கம்

கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்  நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம் என அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பதிலடி கொடுத்துள்ளார். 

 Tamil News Live Updates: கம்பி கட்டும் கதை கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ்.. அண்ணாமலை

09:55 PM (IST) Nov 25

பிக்பாஸ் விசித்ராவை தொடர்ந்து.. எனக்கும் அது நடந்திருக்கு.. அந்த படம்தான் - பகீர் கிளப்பிய நடிகை சரண்யா

பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்து கொண்டுள்ள நடிகை விசித்ரா தனக்கு படப்பிடிப்பு தளத்தில் மாஸ் ஹீரோ ஒருவரால் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியுள்ளது கடும் அதிர்ச்சியை சினிமா பிரபலங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்  நடிகை சரண்யா பேட்டி வைரலாகி வருகிறது.

09:27 PM (IST) Nov 25

How To Get Rich : உங்களை மிகப்பெரிய பணக்காரர் ஆக்கும் 7 முதலீட்டு வழிகள் இதோ..!!

உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கும், நீங்கள் பணக்காரர் ஆவதற்கும் வழி வகுக்கும் ஏழு ஸ்மார்ட் முதலீட்டு விருப்பங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

07:20 PM (IST) Nov 25

காருக்குள் கட்டுக்கட்டாக பணம்.. தீயில் கருகிய சம்பவம்.. விபத்தால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை.!!

தெலங்கானா மாநிலம், வாரங்கலில் கார் இன்ஜினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

06:50 PM (IST) Nov 25

ரூ.10 ஆயிரம் தான் உங்கள் பட்ஜெட்டா.. குறைந்த விலையில் 5 தரமான ஸ்மார்ட்போன்கள்.. இதை வாங்குங்க!

10 ஆயிரம் ரூபாய்க்குள் விற்பனையாகும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

05:33 PM (IST) Nov 25

வங்கிக் கணக்கிலிருந்து இவ்வளவு பணத்துக்கு மேல் எடுக்காதீங்க.. மீறினால் வரி கட்ட வேண்டும்.. எவ்வளவு?

இப்போது நீங்கள் ஒரு வருடத்தில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இவ்வளவு பணத்தை எடுக்கலாம். இதை மீறினால் வரி கட்ட வேண்டியிருக்கும். இதனைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

04:08 PM (IST) Nov 25

உத்தராகண்ட் சுரங்க விபத்து: விரைவில் நல்ல தகவல்.. மீட்பு பணியில் கிடைத்த க்ரீன் சிக்னல்.. அதிகாரிகள் பேட்டி..

உத்தராகண்ட் சுரங்க விபத்து தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தப்பட்ட பணி மீண்டும் நடைபெற்று வருகிறது.விரைவில் உள்ளே மாட்டிக்கொண்ட தொழிலாளர்களை மீட்போம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

03:33 PM (IST) Nov 25

லைசென்ஸ் தேவையில்லை..இந்தியாவில் விற்பனையாகும் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவைதான்..

இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகும் அற்புதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றிய அம்சங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

01:28 PM (IST) Nov 25

முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்கு! அதிகார மமதை.. சர்வாதிகாரப் போக்கு! வாபஸ் வாங்குங்கள்! இபிஎஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர். நடராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

01:26 PM (IST) Nov 25

கம்பி கட்டும் கதை கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ்.. அண்ணாமலை

கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்  நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம் என அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பதிலடி கொடுத்துள்ளார். 

11:43 AM (IST) Nov 25

திருவண்ணாமலை தீப திருவிழா.. இன்று முதல் 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம் இதோ.!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை ஓட்டி இன்று முதல் நவம்பர் 27ம் தேதி வரை 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

11:42 AM (IST) Nov 25

Today Gold Rate in Chennai : மீண்டும் வேலையை காட்டும் தங்கம்! புதிய உச்சத்தில் விலை! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

09:09 AM (IST) Nov 25

Vegetables Price: கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் விலை.. தக்காளி, இஞ்சி விலையும் புதிய உச்சம்!

காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், தக்காளி, வெங்காயம் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

08:41 AM (IST) Nov 25

பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு ஆளுநர் ரவிக்கும் பொருந்தும்.. இறங்கி அடிக்கும் கே.எஸ்.அழகிரி..!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு உகந்த வழக்கறிஞரை அழைத்து, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்துகொள்ள வேண்டும் என  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

07:20 AM (IST) Nov 25

Chennai Heavy Rain: அதிகாலையிலேயே பொளந்து கட்டும் கனமழை!சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

அதிகாலை முதல் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

07:20 AM (IST) Nov 25

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளில் கொண்ட சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமாக நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருக்கின்றனர். 


More Trending News