அதிமுக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

10:11 PM (IST) Nov 18
சிறந்த மைலேஜ் பைக்குகள் என்பவை பலரின் சாய்ஸ் ஆக உள்ளது. இவை அதிகளவு பணத்தை சேமிக்கிறது. சிறந்த மைலேஜ் கொடுக்கும் பைக்குகளை தெரிந்து கொள்ளலாம்.
09:37 PM (IST) Nov 18
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
08:38 PM (IST) Nov 18
இந்த வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு FD மீது அதிக வட்டியை வழங்குகின்றன. அவை என்னென்ன வங்கிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
08:03 PM (IST) Nov 18
இந்தியாவில் 5G மொபைல் நெட்வொர்க் பல்வேறு இடங்களில் கிடைக்கிறது. அது எங்கெங்கு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
06:56 PM (IST) Nov 18
இப்போது வீட்டில் அமர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் பற்றிய முழுமையான செயல்முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
06:23 PM (IST) Nov 18
2023 ஹோண்டா CB350 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
05:32 PM (IST) Nov 18
தற்போது வெளியாகி உள்ள செவ்வாய்க்கிழமை பேய் படமாக இருக்கும் என்று பார்த்தால், அடல்ட் ஒன்லி படமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரபல யூடியூபர் ப்ளூ சட்டை மாறன்.
05:00 PM (IST) Nov 18
உலக பணக்காரர் என்ற பட்டத்தை எலான் மஸ்க் பெற்றுள்ளார். இந்திய அளவில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். ஆனால் உத்தரபிரதேசத்தில் பணக்காரர் என்ற பட்டத்தை வைத்திருப்பவர் யார் தெரியுமா? உ.பி.யில் உள்ள பணக்காரர்களைப் பற்றி பார்க்கலாம்.
04:34 PM (IST) Nov 18
வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க முடியவில்லையா? அபராதங்களைத் தவிர்க்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
02:46 PM (IST) Nov 18
Google Pay, Paytm மற்றும் PhonePe போன்ற பயன்பாடுகளுக்கு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செயலற்ற UPI ஐடிகள் மற்றும் எண்களை செயலிழக்கச் செய்யுமாறு இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவுறுத்தியுள்ளது.
12:36 PM (IST) Nov 18
ஆளுநர் பற்றி பேசக் கூடாதுனு சொல்லிட்டு, பேச விட்டு கேட்டுக்கிட்டு இருக்கீங்க பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். அப்போது சபாநாயகர் அப்பாவு: ஆளுநர்களின் செயல்பாட்டைத்தான் உறுப்பினர்கள் விமர்சித்தார்கள். ஆளுநர்கள் மாறுவார்கள், நாளை நீங்கள் கூட ஆளுநராகலாம் என கூறினார்.
12:27 PM (IST) Nov 18
ஆளுநர் இந்த 10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதுகிறேன் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11:36 AM (IST) Nov 18
மாநில அரசுக்கு போட்டியாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆளுநர்கள் ஆட்சியாளர்கள் அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என சிபிஐ எம்எல்ஏ டி.ராமசந்திரன் பேசியுள்ளார்.
11:34 AM (IST) Nov 18
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை மதிமுக சார்பில் ஆதரிக்கிறேன். நம் விடுதலைக்காக பாடுபட்ட சங்கரய்யாவிற்கு முனைவர் பட்டம் கொடுக்காத ஆளுநரை கண்டிக்கிறேன் என மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் கூறியுள்ளார்.
11:33 AM (IST) Nov 18
என்றைக்காவது ஆளுநர் அமைச்சர்களை அழைத்து, தமிழ்நாடு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியதுண்டா. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை முடக்குகின்ற செயலைத்தான் ஆளுநர் செய்கிறார் என கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
11:31 AM (IST) Nov 18
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை மனித நேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன். அமைச்சரவை ஆலோசனை அடிப்படையில் தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
10:27 AM (IST) Nov 18
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார் என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
10:26 AM (IST) Nov 18
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களை நாம் மீண்டும் நிறைவேற்றி அனுப்ப இருக்கிறோம். திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கவே சட்டமன்ற சிறப்பு கூட்டம். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய அனைத்தும் வினாக்களுக்கும் முறையாக பதில் அளித்திருக்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
08:34 AM (IST) Nov 18
அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். பழைய தேர்வு கட்டணத்தையே வசூலிக்கவும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
07:41 AM (IST) Nov 18
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பஞ்செட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:30 AM (IST) Nov 18
சினிமா தியேட்டரில் கூட பிளாக்கில் முறைகேடாக டிக்கெட் விற்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் இத்தகைய கேவலமான செயல் புனிதமான கோவிலில் நடப்பது வெளிவந்தபோதும் காவல்துறை, அரசு அதிகாரிகள் அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காடேஸ்வரா சுப்பிரமணியம் காட்டமாக கூறியுள்ளார்.
07:29 AM (IST) Nov 18
மதுரையில் ஜாமீனில் வந்த இளைஞர் நள்ளிரவில் சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.