தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

06:29 PM (IST) Mar 11
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுக தகவல் தொழில்நுட்ப அணி கடுமையாக விமர்சித்துள்ளது
05:52 PM (IST) Mar 11
பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்
05:25 PM (IST) Mar 11
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25ஆவது முறையாக வருகிற 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
04:52 PM (IST) Mar 11
புதிய சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையரை நியமிக்க தடை கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்
03:36 PM (IST) Mar 11
தேர்தல் பத்திரங்கள் வழக்கு தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, நரேந்திர மோடியின் நன்கொடை வியாபாரம் அம்பலமாகப் போகிறது என சாடியுள்ளார்
03:30 PM (IST) Mar 11
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
02:51 PM (IST) Mar 11
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
02:35 PM (IST) Mar 11
பாஜகவுடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சரத்குமார் ஆகியோர் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
02:03 PM (IST) Mar 11
ரயிலில் பயணம் செய்யும் பலருக்கும் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதில்லை. இந்த நிலையில் ஐஆர்சிடிசி நல்ல செய்தியை அறிவித்துள்ளது.
01:36 PM (IST) Mar 11
பொன்மகள் சேமிப்பு திட்டம் போலவே ஆண் குழந்தைகளுக்கு என்று செயல்படக்கூடிய திட்டம் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் ஆகும்.
01:23 PM (IST) Mar 11
தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழா ரத்து தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்த நிலையில், அண்ணாமலை மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்
12:59 PM (IST) Mar 11
யுபிஎஸ்சி பர்சனல் அசிஸ்டென்ட் (பிஏ) பதவிகளுக்கான திறப்புகளை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
12:06 PM (IST) Mar 11
தேர்தல் என்பது வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளை தவறாமல் தேர்ந்தெடுக்கும் முறை ஆகும்.
11:51 AM (IST) Mar 11
தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட மிக எளிமையான உத்தரவை பின்பற்ற எஸ்.பி.ஐ. வங்கி கால அவகாசம் கோருவது எந்த வகையில் ஏற்புடையது என உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது
11:29 AM (IST) Mar 11
பாலிவுட்டின் 'முன்னா பாய்' சஞ்சய் தத்தின் வாழ்க்கை பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சஞ்சய் தத்தின் ரசிகர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ளது. சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
11:23 AM (IST) Mar 11
தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளைதான் கடைசி தேதி
10:55 AM (IST) Mar 11
ஹோண்டா கிராஸ் கப் 110 அட்வென்ச்சர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
10:41 AM (IST) Mar 11
தருமபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.
10:35 AM (IST) Mar 11
நாடு முழுவதும் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்
09:13 AM (IST) Mar 11
பாரதிய ஜனதா கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து பாஜக எம்பி பிரிஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
08:40 AM (IST) Mar 11
ஏர்டெல் 2 புதிய சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் 1TB வரை அன்லிமிடெட் டேட்டாவைப் பெறலாம்.
08:03 AM (IST) Mar 11
ஆறு மாதங்களில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வரப்போகிறது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
07:33 AM (IST) Mar 11
சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
07:32 AM (IST) Mar 11
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அன்புமணி இன்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
07:32 AM (IST) Mar 11
நேற்று ஒரு கதாநாயகன் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருவதாக தெரிவித்த வேல்முருகன், தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகின்ற நிலையை உடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.