Tamilnadu corona : சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
undefined
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு அரசு துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையமாத்தில் மையத்தில் உள்ள சிகிச்சைக் கூடங்கள் மற்றும் ஆய்வகங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அவருடன் தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க : TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!
சுகாதார துறை அமைச்சர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழகத்தில் மக்களை தேடி சுகாதார திட்டங்கள் உள்ளிட்ட சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இதுபோன்ற திட்டங்கள் மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பு ஊசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பி4, பி5 தொற்று வேகமாக பரவி வருகிறது. சட்டம் போட்டு தான் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கிடையாது. அவர்கள் தங்கள் நலன் கருதி அனைவரும் தானாக முக கவசம் அணிய வேண்டும். தமிழகத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பில் உள்ளது’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க : AIADMK : அதிமுக அலுவலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இபிஎஸ் போட்டோ.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்
இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்