கோயில் உண்டியலில் ரூ. 44 லட்சம் கருப்பு பணம்..! வேலூரில் பரபரப்பு

 
Published : Nov 15, 2016, 01:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
கோயில் உண்டியலில் ரூ. 44 லட்சம் கருப்பு பணம்..! வேலூரில் பரபரப்பு

சுருக்கம்

வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலய உண்டியலில் ஒரே நாளில் ரூ. 44 லட்சம்கருப்பு பணம், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக போடப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வேலூர் கோட்டையிலுள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை தினசரி இரவு 8 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் எண்ணப்படும். 

அவ்வாறு நேற்று உண்டியலை திறந்த போது அதில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் கட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பணத்தை எண்ணிய போது 1000 ரூபாய் கட்டுகள் முப்பதும், 500 ரூபாய் பணக்கட்டுகள் இருபத்தி எட்டும் என 44 லட்ச ரூபாய் இருந்தது. 

பிரதமர் மோடி 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்னர் தமிழக கோவில்களில் முதல்முறையாக உண்டியல் மூலம் கட்டுகட்டாக பணம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!