Annamalai Warning DMK Government: திருச்செந்தூர் முருகன் கோவில் கழிவறை தரம் குறித்து பாஜக பிரமுகர் வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை அதிகாலை 4 மணிக்கு காவல்துறை மூலம் திமுக அரசு மிரட்டல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் கழிவறை தரமாக கட்டப்படவில்லை என்றும் பொருட்கள் காணாமல் போய் உள்ளதாகவும் பாஜக பிரமுகர் பிரதீப்ராஜன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து அதிகாலை நான்கு மணிக்கு பிரதீப்ராஜன் வீட்டிற்கு காவல்துறையை அனுப்பி திமுக அரசு மிரட்டியிருக்கிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி என அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜாமீன் கிடைப்பதற்காக இப்படியா? உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றிய செந்தில் பாலாஜி! ஒரே போடு போட்ட அண்ணாமலை!
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருச்செந்தூர் திருக்கோவிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றதாகத் திமுக அரசு கூறியது. ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யப்படவில்லை என்பதைத் தொடர்ந்து செய்திகளில் கண்டு வருகிறோம். இந்த நிலையில், கோவிலுக்குள் பக்தர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகளின் அவல நிலையைக் காணொளியாக வெளியிட்ட தமிழக பாஜவைச் சேர்ந்த பிரதீப்ராஜன் அவர்கள் வீட்டிற்கு, அதிகாலை நான்கு மணிக்குக் காவல்துறையை அனுப்பி மிரட்டியிருக்கிறது திமுக அரசு.
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக, தனது ஊழலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துபவர்கள் மீது, காவல்துறையையோ, குண்டர்களையோ ஏவுவது வழக்கமாகி இருக்கிறது. திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதையும் படிங்க: திராவிடம் முன்னேற்ற கழகம் வரலாறு காணாத மோசமான ஆட்சி ! அண்ணாமலை ஆவேசம் !
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது, இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி என அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.