குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலாஜி, புகார் மீது எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறியதுடன், சவுதாமணியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிப்பதை நிராகரித்து பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.
அவதூறு வழக்கில் சிக்கிய பாஜக பெண் நிர்வாகி சவுதாமணி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி அவரை நீதிமன்ற காவலை எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யபட்ட நிலையில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், விசாரணை மேற்கொண்டு சென்னையில் இருந்த சௌதாமணியை கைது செய்தார்.
மேலும் சவுதாமணி மீது இந்திய தண்டனைச் சட்டம் கலகம் செய்யத் தூண்டுதல் (153) அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதி பாலாஜி முன் நிறுத்தினர்.
வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலாஜி, புகார் மீது எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறியதுடன், சவுதாமணியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிப்பதை நிராகரித்து பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.
மேலும் போலீசார் விசாரணைக்கு அழைத்தால் முறையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சௌதாமணிக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.