சனாதன தர்மத்தை சிம்பிளா காட்டுற தலைவா! ரஜினியை புகழுந்து தள்ளும் பாஜக!

Published : Oct 05, 2025, 04:19 PM IST
Rajinikanth

சுருக்கம்

தமிழக பாஜக தலைவர் வினோஜ் பி. செல்வம், நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீகப் பயணத்தையும் எளிமையையும் பாராட்டியுள்ளார். இந்து மதத்தை மற்ற நடிகர்கள் கேலி செய்வதாகக் கூறி, ரஜினிகாந்த் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவதாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 'இந்து மதம் குறித்துக் கேலி செய்வது' ஒரு ஃபேஷனாகச் சில நடிகர்கள் மத்தியில் காணப்படுவதாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்தைப் பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் வினோஜ் பி. செல்வம் இன்று சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சமீகத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டபோது, வெள்ளை வேட்டி மற்றும் மேல்துண்டு அணிந்து, மிக எளிமையாக வாழை இலையில் உணவு உட்கொள்ளும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

ஆன்மீகப் பயணத்தில் ரஜினிகாந்த்:

தமது சமூக ஊடகப் பக்கத்தில் வினோஜ் பி. செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், “சில நடிகர்களுக்கு இந்து மதத்தை கேலி செய்வதும், தாக்குவதும் ஒரு ஃபேஷனாக இருக்கும் இந்த மாநிலத்தில், ஒரு சூப்பர் ஸ்டார் எளிமையாகவும், பணிவாகவும், உண்மையாகவும் இருக்கிறார். சனாதன தர்மத்தின் பாதையைப் பின்பற்றி, தனது பக்தியை பெருமையுடன் வெளிப்படுத்துகிறார், சூப்பர் தலைவா!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிமையான தோற்றத்தில் ஒரு திறந்தவெளியில் நின்றபடி உணவு உட்கொள்ளும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

 

 

வெள்ளை ஆடையில் எளிமை:

வினோஜ் பி. செல்வம் பகிர்ந்துள்ள அந்தப் புகைப்படத்தில் ரஜினிகாந்த் வெள்ளை வேட்டி, வெள்ளை மேல்துண்டு அணிந்து, ஒரு சிறு சுவரின் மீது வைக்கப்பட்டிக்கும் வாழை இலையில் எளிமையாக உணவருந்துகிறார். அவருக்கு அருகில் மற்றொருவரும் அதேபோல உணவருந்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தக் காட்சியையும், ரஜினிகாந்தின் ஆன்மீக நாட்டத்தையும் இணைத்து, பாஜக தலைவர் வினோஜ் பி. செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு விவாதப் பொருளாகியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி