பாஜக மாநிலத் துணைத் தலைவர் கைது..! அத்துமீறி பூட்டை உடைத்தவர்களை தட்டி தூக்கிய போலீஸ்

Published : Aug 14, 2022, 04:55 PM IST
பாஜக மாநிலத் துணைத் தலைவர் கைது..! அத்துமீறி பூட்டை உடைத்தவர்களை தட்டி தூக்கிய போலீஸ்

சுருக்கம்

தமிழ்நாடு மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா கோயிலுக்குள் முறைகேடாக நுழைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

பாரத மாதா சிலை-பூட்டு உடைப்பு

75 வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி தருமபுரி மாவட்டம்,பாப்பாரப்பட்டியில் கடந்த 11ஆம் தேதி  பாஜக சார்பாக பாதயாத்திரை நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணைத்தலைவருமான கே.பி.ராமலிங்கம் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டார். பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை ஊர்வலமாக பாஜகவினர் சென்றனர். இதை தொடர்ந்து  தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா ஆலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர். ஆனால் அங்கு பூட்டு போட்டு இருந்த காரணத்தால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு நின்ற காவலரிடம் பாரதமாதா கோயில் வளாகத்தை திறக்கும் படி கூறினார். 

திமுக உட்கட்சி தேர்தலில் மா.செ உள்ளடி வேலை...? கட்சி மாற தயாராகும் மூத்த நிர்வாகிகள்..! காத்திருக்கும் பாஜக..

யார் இந்த டாக்டர் சரவணன்..! எத்தனை கட்சி மாறியுள்ளார் தெரியுமா..? அதிர வைக்கும் பரபரக்கும் தகவல்

கே.பி.ராமலிங்கம் கைது

 காவல்துறையினரும், கோயில் நிர்வாக அதிகாரிகளும் வெளியில் நின்று வழிபாடு செய்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதனை கேட்காத நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம்  கோயில் பூட்டை உடைத்து பாரத மாதாவிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். இதனையடுத்து கே.பி. ராமலிங்கம் உட்பட 50 பேர் மீது பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். நேற்று இரவே பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய தலைவர் சிவசக்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் மௌனகுரு, முன்னாள் நகரத் தலைவர் மணி ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து ராசிபுரத்தில் தனது வீட்டில் இருந்த கே.பி.ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். அப்போது பாதுகாப்பு பணிக்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். 

இதையும் படியுங்கள்

பாஜக வடமாநிலத்தில் கடைபிடிக்கும் அரசியல் வெறியாட்டத்தை தமிழகத்திலும் நுழைக்க முயற்சியா..! சீமான் ஆவேசம்


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்