
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் இம்முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்கள் மற்றும் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளார். அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக சதீஷ் ராஜா நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இவர் யார் என்பதை விரிவாக பார்ப்போம்.
கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவரான சதீஷ் ராஜா அனைத்து சமூகங்களிடமும் சமநிலை பார்வையுடன் செயல்படும் தலைவராக, தொகுதி முழுவதும் பரவலாக அறியப்பட்ட பாஜக முகமாக சதீஷ் ராஜா திகழ்கிறார்.
தன்னுடைய சொந்த மண்ணான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன், இன்று வரை கள அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் சதீஷ் ராஜா. குறிப்பாக, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கட்சி தலைமையால் வழங்கப்பட்டால், “நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்ற நம்பிக்கையுடன், அந்த உறுதியை கட்சி தலைமையிடம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டுப்பற்று – நாட்டு வளர்ச்சி – பாஜக அடையாளம்
நாட்டுப்பற்று, மக்கள் நலன், வளர்ச்சி அரசியல் ஆகியவற்றை தனது அடையாளமாகக் கொண்டு, கட்சி கொள்கைகளை மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்லும் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் சதீஷ் ராஜா.
யார் இந்த சதீஷ் ராஜா?
இளம் வயதில் அரசியல் பயணம் தொடங்கி மாநில அளவிலான தலைமை பொறுப்புக்கு உயர்ந்த சதீஷ் ராஜா. அடித்தள அரசியலில் இருந்து மாநிலத் தலைமையிடம் வரை சதீஷ் ராஜாவின் பயணம் பல சவால்களை கடந்து வந்து இருக்கிறது.
அடித்தள அரசியலில் தொடங்கிய வாழ்க்கை
கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ராஜா. சாதாரண குடும்ப சூழலில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே சமூக சேவை மற்றும் மக்கள் பணியில் ஆர்வம் கொண்டவராக வளர்ந்தார். 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, அடிப்படை தொண்டராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆரம்ப காலத்தில் வீடு வீடாக சென்று கட்சியின் கொள்கைகளை விளக்குவது, உள்ளூர் பிரச்சனைகளில் நேரடியாக களமிறங்குவது, மக்களின் தேவைகளை தலைமைக்கு கொண்டு செல்வது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
சிறுபான்மை சமூகங்களுக்கான அர்ப்பணிப்பு
2017ஆம் ஆண்டு பாஜக சிறுபான்மை மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, சமூக பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளில் தனிப்பட்ட கவனம் செலுத்தினார். 2022ஆம் ஆண்டு முதல் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்டு, சிறுபான்மை அணியின் செயல்பாடுகளை மாநிலம் முழுவதும் ஒருங்கிணைத்து வழிநடத்தி வந்தார். அரசு திட்டங்கள் நேரடியாக மக்களிடம் சென்றடைய முக்கிய பங்காற்றினார்.
மாநில வர்த்தக பிரிவு தலைவராக உயர்வு
2025 ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக வர்த்தக பிரிவின் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இந்த பொறுப்பில்:
* வணிகர்கள்
* சிறு தொழிலதிபர்கள்
* MSME நிறுவனங்கள்
* சுயதொழில் முனைவோர்
ஆகியோரை கட்சியுடன் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
வணிக வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள், தொழில் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற துறைகளில் அரசியல் ரீதியாக செயல்பட்டு வருகிறார்.
குடும்ப பின்னணி
திருமணமான சதீஷ் ராஜாவின் மனைவி டாக்டர் ஸ்ரீதேவி (MBBS). குடும்பத்தின் முழு ஆதரவும் அவரது அரசியல் பயணத்திற்கு வலுவான தூணாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பேசும் திறன் கொண்டவர்.
இளம் தலைமுறைக்கு முன்னுதாரணம்
அடித்தளத்தில் இருந்து உழைத்து, படிப்படியாக உயர்ந்து, இன்று மாநில அளவிலான முக்கிய தலைவராக உருவாகியுள்ள சதீஷ் ராஜா, இளம் தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். உழைப்பு, நேர்மை, மக்கள் தொடர்பு, சமூக சேவை ஆகியவை அவரது அரசியல் வாழ்க்கையின் அடையாளமாக உள்ளன.
எதிர்கால அரசியல் இலக்கு
மக்கள் நலன், வணிக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சமூக ஒற்றுமை, மாநில பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை மையமாக வைத்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். தமிழக அரசியலில் மக்கள் நம்பிக்கை கொண்ட, வலுவான தலைவராக உருவாக வேண்டும் என்பதே அவரது நீண்டகால இலக்காக உள்ளது. இவருக்கு 2024 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்முறை தமிழகம் வந்த பிரதமரை சதீஷ் ராஜா சந்தித்ததை அடுத்து இம்முறை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.