திமுகவை சரமாரியாக விமர்சித்த ராமதாஸ்.. NDA பக்கம் வண்டியை திருப்பும் ஐயா? ட்விஸ்ட்!

Published : Jan 26, 2026, 08:11 PM IST
Ramadoss

சுருக்கம்

விசிக தலைவர் திருமாவளவன், 'பாமக கட்சி உள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம்' என தெளிவாக கூறினார். திமுகவும் விசிகவை கழட்டி விட்டு ராமதாஸை சேர்க்கும் ஐடியாவில் இல்லை என கூறப்படுகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ஐக்கியமான என்டிஏ கூட்டணியை கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது எனவும் பாராட்டியிருந்தார். இதனால் அவர் திமுக கூட்டணியில் சேர போகிறார் என தகவல் பரவியது. இதற்காக திமுக கூட்டணியில் உள்ள தங்களின் பிரதான எதிரியான விசிகவையும் ஏற்றுக்கொள்வதாக ராமதாஸ் தரப்பு தெரிவித்து இருந்தது.

திருமாவளவனுக்காக ராமதாஸை ஏற்க மறுக்கும் திமுக‌

ஆனால் விசிக தலைவர் திருமாவளவன், 'பாமக கட்சி உள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம்' என தெளிவாக கூறினார். திமுகவும் விசிகவை கழட்டி விட்டு ராமதாஸை சேர்க்கும் ஐடியாவில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் மீண்டும் NDA பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், ராமதாஸ் தேர்தலின்போது மக்கள் திமுக மீது கோபத்தை காட்டுவார்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

திமுக அரசை விமர்சித்த ராமதாஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மின்கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், வசூலிப்பதிலும் நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாடு அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறையால் நடுத்தரமக்கள் அதிக மின் கட்டணம் செலுத்தவேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகான மின்கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வலியிறுத்தி, அறிக்கை வெளியிட்டேன்.

அமைச்சர்கள் சொன்னது என்ன?

கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகள், வணிக பயன்பாட்டிற்கான மின்இணைப்புகளுக்கு ஸ்மார்ட்மீட்டர் பொருத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மின்துறை அமைச்சர் சிவசங்கர் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அவை பொருத்தப்படும். ஸ்மார்ட்மீட்டர் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிட்டு வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என்றார்.

திமுகவின் 221-வது வாக்குறுதி

கடந்த ஆண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த டெண்டர் விடப்பட்டது என்றார். டிசம்பர் மாதம் அமைச்சர் சிவசங்கர் இதையே முன் மொழிந்தார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 221-வது வாக்குறுதியில் இரண்டு மாதங்களுக்கு 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரையில் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

மக்களின் கோபத்துக்கு ஆளாவீர்கள்

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் தற்போது சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைபடுத்த மேலும் 2 ஆண்டுகாலம் தேவைப்படும் என்றும் அதன் பின் மாதாமாதாம் மின் கணக்கீடு செய்ய அரசு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2026 சட்டசபைத்தேர்தல் கோடைகாலமான மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது மின்சாரத்தை அதிக அளவு பயன்படுத்துவார்கள். இதனால் ஏற்படும் மின் கட்டண சுமையை ஏற்கும் அனைத்துதரப்பு மக்களும் தங்களின் கோபத்தை வாக்களிப்பதில் காண்பிப்பார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ! ஆட்சியர் பவன்குமார் பேட்டி.
பிரபல இயக்குநரின் அண்ணன் மகள் ரஞ்சனா நாச்சியார்.! விஜயை விமர்சிக்க இதுதான் காரணமா?