உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வல்ல: மாணவர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

Published : Aug 14, 2023, 01:40 PM ISTUpdated : Aug 14, 2023, 02:48 PM IST
உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வல்ல: மாணவர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

சுருக்கம்

உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வல்ல என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்

நீட் தேர்வால்  நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகன் ஜெகதீஸ்வரன் உயிரிழந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை செல்வசேகரும் மறுநாளில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜெகதீஸ்வரன் உயிரிழப்பு செய்தி அறிந்து வேதனையடைந்ததாக தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வல்ல என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்றும், மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்திருக்கிறார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

எந்தச் சூழ்நிலையிலும், உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எதற்கும் முடிவல்ல, எதற்கான தீர்வுமல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் ஒரு நிமிட தவறான முடிவால், உங்கள் பெற்றோர்கள் ஆயுட்காலம் முழுவதும் வேதனைப்படும்படி செய்வது தவறு.

மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரித் தேர்வுகள், அரசுப் பணித் தேர்வுகள், குடிமையியல் பணித் தேர்வுகள் என தங்கள் கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கையில் பரிட்சைகள் பள்ளி கல்லூரி பருவத்துடன் முடிவடைவதில்லை என்பதே எதார்த்தமான உண்மை. 

குடி எனும் பலிபீடம்... எப்போது டாஸ்மாக் தடுப்பு சுவர் விழும்? முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி சரமாரி

குழந்தைகள், சமூக அழுத்தங்களுக்குப் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்குரியது. ஒவ்வொரு குழந்தையும் தனிச் சிறப்புடனேயே பிறக்கிறது. யாருக்கான வாய்ப்பையும் யாரும் பறித்து விட முடியாது. எனவே, குழந்தைகளை, கல்வி, மதிப்பெண்கள் வைத்து ஒருவரோடு ஒருவர் ஒப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணங்களை விதைப்போம். மன உறுதியுடன் வளர்ப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

முன்னதாக, மாணவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். “நீட் தேர்வு எனும் பலிபீடம் மேலும் ஒரு மாணவனின் உயிரை பறித்துள்ளது. அரசியல் மாற்றம் நடக்கும்போது நீட் தடுப்பு சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும்.” எனவும் தெரிவித்துள்ளார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற கல்மனசுக்காரர்களின் காலத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை. ஜெகதீஸ்வரன் போன்று எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ரவி போன்றவர்களின் இதயம் கரையப்போவதில்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
அடுத்த 3 மணிநேரம் உஷார்! டெல்டாவில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!