தமிழகத்தில் மழை தொடருமா.? அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்- பாலச்சந்திரன் தகவல்

Published : Aug 14, 2023, 01:24 PM ISTUpdated : Aug 14, 2023, 01:26 PM IST
தமிழகத்தில் மழை தொடருமா.? அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்- பாலச்சந்திரன் தகவல்

சுருக்கம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை தொடருமா.?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கன மழை பெய்தது. இன்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா? என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.  

மேற்கு திசை காற்றும், தென்மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வடதமிழகம் பகுதியில் நிலவுகிறது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்கிற்கும் மேல் அடுக்கிற்கும் இடையிலான நிலைத் தன்மை குறைந்து இடி மழைக் கூட்டங்கள் உருவாகி மேற்கில் இருந்து கிழக்காக நகர்ந்து கடற்பகுதியில் அருகே வலுப்பெற்றது.  இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களிலும்,

அதிகபட்ச மழை பதிவு.?

சென்னை,காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.  அதிகப்பட்சமாக ஜமீன் கொரட்டூரில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய்ட் வாய்ப்புள்ளதாக  கூறினார்.

சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என கூறினார். தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையிலும் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 153 மில்லிமீட்டர் மழை உள்ளது. இது இயல்பை விட 6  சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

சென்னை, திருவள்ளூரில் இடி மின்னலோடு விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை...பொதுமக்கள் மகிழ்ச்சி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live Today 18 January 2026: 2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு
தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்