பாஜக மாநில தலைவர் அண்ணமாலைக்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டிய கோயில்களில் பாஜகவினர் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.
அண்ணாமலைக்கு உடல்நிலை பாதிப்பு
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவாதவும் அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்தது.
இதன் படி டெல்லிக்கு சென்றவர்கள் தமிழகத்தில் உள்ள அரசியல் நிலமை தொடர்பாக அறிக்கை அளித்தார். இதனையடுத்து நேற்று முன் தினம் சென்னை திரும்பியவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.
கோயிலில் சிறப்பு வழிபாடு
அப்போது அவருக்கு நுரையீரல் துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு சுவாசக் குழாயில் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது இதனையடுத்து 10 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன் காரணமாக 6-ம் தேதி தொடங்க இருந்த நடைபயணத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நடைபயணத்தை 16-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே அண்ணாமலையின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைய வேண்டிய பாஜகவினர் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண் சோறு சாப்பிட்ட பாஜகவினர்
கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர் சார்பாக பேருர் பட்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது பாஜக தெற்கு மாவட்ட ஊடகப்பிரவு மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையில் அங்கப்பிரதட்சணம் செய்து மண் சோறு உண்டனர்.
இதையும் படியுங்கள்
கூட்டணியில் இருந்து போறவங்க போகட்டும்.. அதை பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்.. அண்ணாமலை.!