பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று சக்கர வாகனம் கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளிகளுக்கு 4 நாட்களில் மூன்று சக்கர வாகனம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்ட சம்பவம் பயனாளிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சியராக கற்பகம் பொறுப்பேற்றதில் இருந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், உடனடியாக தீர்வுகாணக்கூடிய கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
undefined
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், விவசாயிகளள், ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளுக்கு துரிதமாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் முதலில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட பிறகு தான் மற்ற பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்வார்.
அண்ணாமலைக்கு உடல்நிலை பாதிப்பு..! கோயிலில் மண் சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு நடத்திய பாஜகவினர்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மாற்றுத்திறனாளிகளின் நிலை உணர்ந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் கொளத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடம் 3 சக்கரம் பொருத்தப்பட்ட வண்டி கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வண்டி வழங்க உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் அடிப்படையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தலைமையான குழுவினர் கொளத்தூர் ஊராட்சியில் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பயனாளிகளை சந்தித்து மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகளை வழங்கினர். தங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது அறிந்தும், நலத்திட்ட உதவி தங்களின் வீடு தேடி வந்துள்ளதை அறிந்தும் மாற்றுத்திறனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.