சில்லறை கட்சி... அண்ணாமலை பற்றி கேள்வி கேட்டதால் கடுப்பான அமைச்சர் டிஆர்பி ராஜா!

By SG Balan  |  First Published Mar 25, 2024, 8:24 PM IST

"எங்களுகுக எதிரில் அதிமுக என்ற இயக்கம் உள்ளது. பிரதான எதிர்க்கட்சி அதிமுக. அதைப் பற்றிய கேள்விகளை மட்டும் கேளுங்க. சில்லறை கட்சிகள் குறித்து கேட்டால் பதில் சொல்ல முடியாது" என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சீறினார்.


அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பியதால் கடுப்பான அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சில்லறை கட்சிகளுக்கு பதில் சொல்ல முடியாது என காட்டமாகக் கூறியுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக - அதிமுக இடையேதான் போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் திமுக சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து அமைச்சர் டிஆர்பி ராஜா பிரச்சாரம் செய்தாலர். கணபதி ராஜ்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, "திமுக கோவையில் அட்டகாசமான வெற்றி பெறும். திமுகவுக்கு எதிராகப் போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்கப்போகிறார்கள். மக்கள் திமுகவின் பக்கம்தான் இருக்கிறார்கள்" எனக் கூறினார். பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இங்கு வந்து போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2025 முதல் வாழ்நாள் ஊதியத் திட்டம்! குறைந்தபட்ச ஊதிய முறைக்கு குட்பை சொல்லும் மத்திய அரசு!

கோவையில் திராவிடக் கட்சிகளால் 2 டிகிரி வெப்பம் அதிகமாகிவிட்டது என்று பேசியிருக்கும் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கருத்து குறித்து கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் ராஜா கடுப்பாகி காட்டமாக பதில் அளித்தார். "எங்களுகுக எதிரில் அதிமுக என்ற இயக்கம் உள்ளது. பிரதான எதிர்க்கட்சி அதிமுக. அதைப் பற்றிய கேள்விகளை மட்டும் கேளுங்க. சில்லறை கட்சிகள் குறித்து கேட்டால் பதில் சொல்ல முடியாது" என்று சீறினார்.

"ஒன்று மட்டும் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். திமுகவை திசை திருப்புவதற்காகவே இது போன்ற கேள்விகள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் களத்தில் திமுகவும் அதிமுகவும் மட்டுமே உள்ளன" என்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா குறிப்பிட்டார்.

"எங்கள் எதிரி அதிமுகதான். அவர்களைக் குறிவைத்து அடிப்போம். பொதுமக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் எங்களிடம் மற்றவர்கள் பற்றிக் கேள்வி கேட்டால் அது கவனச் சிதறல் மட்டுமே. பாஜக போன்ற சில்லறை கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு, உண்மையான எதிரியை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளோம். கோவையில் மகத்தான வெற்றியைப் பெறுவோம்" என்றும் அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் கிடைக்கும் ஜாக்பாட்! முழு விவரம் இதோ!

click me!