BJP : தமிழகத்தில் முதல் முறையாக 10% வாக்குகளை கடந்த பாஜக.! அதிமுக பெற்ற வாக்கு சதவிகிதம் என்ன தெரியுமா?

By Ajmal Khan  |  First Published Jun 4, 2024, 2:37 PM IST

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் பாஜக முதல் முறையாக 10% வாக்குகளை தாண்டியுள்ளது.. இந்த வாக்கு சதவிகிதம் வாக்கு எண்ணிக்கை முடியும் சமயத்தில் மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. 
 


தேர்தல் கருத்து கணிப்பு

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வெளியானது. இந்தியா கூட்டணி 150 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் கூறப்பட்டு இருந்தது.  ஆனால் அந்த கருத்து கணிப்புகளை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 230 தொகுதிகளில் வரை முன்னிலை பெற்று வருகிறது.  கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தவித்த காங்கிரஸ் கட்சி தற்போது தனித்து 100 தொகுதி வரை முன்னிலை பெற்றுள்ளது.  

Tap to resize

Latest Videos

Roja Selvamani : வாடிய ‘ரோஜா’... நகரி தொகுதியில் இனி வெற்றிக்கு வாய்ப்பில்ல... தோல்வி முகத்தில் நடிகை ரோஜா

1மணி அளவில் வாக்கு சதவிகிதம் என்ன.?

இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  தமிழகத்தில் நாங்கள்தான் இரண்டாம் பெரிய கட்சி என பாஜக கூறிவந்தது. தற்போதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் சதவிகிதத்தில் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் திமுக  24.96 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.  அடுத்ததாக அதிமுக 20.69% வாக்குகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 10 புள்ளி 94 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.  

பாஜகவை பொறுத்தவரை 10.38% வாக்குகளை இந்த முறை தமிழகத்தில் இருந்து தனித்து பெற்றுள்ளது.  மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3.58%  சதவிகிதமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2.48 வாக்கு சதவிகிதமும், தேமுதிக 3.39 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.  நோட்டாவை பொறுத்தவரை தற்போது வரை 1. 07% வாக்குகள் பெற்றுள்ளது மற்ற சுயேட்சைகளை பொறுத்த வரை 21 புள்ளி 2 0 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.

 10% வாக்குகளை தாண்டிய பாஜக

காலையில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை 60 சதவிகித வாக்குகள் மட்டுமே என்னப்பட்டுள்ளன. இன்னும் 40 சதவீத வாக்குகள் என்ன வேண்டிய சூழ்நிலை உள்ள நிலையில் இந்த வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பாஜக ஏற்கனவே 5 முதல் 8 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் தற்போது முதல் முறையாக 10 சதவிகிதத்தை கடந்துள்ளது. பாஜகவின் வாக்கு சதவிகிதம் இன்னும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. 

ADMK vs BJP : 11 தொகுதியில் அதிமுகவை 3ஆம் இடத்திற்கு தள்ளிய பாஜக.! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி
 

click me!