Lok Sabha Elections 2024: 7 தொகுதிகளில் 3வது இடம்! மாஸ் காட்டும் நாம் தமிழர் கட்சி! அதிர்ச்சியில் அதிமுக,பாஜக!

By vinoth kumar  |  First Published Jun 4, 2024, 1:42 PM IST

தற்போதை நிலவரப்படி தமிழகத்தில் 38 தொகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. 
அதேபோல் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக விருதுநகர் தொகுதியிலும், பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக வேட்பாளர் தருமபுரி தொகுதியில் முன்னிலையில் இருந்து வருகின்றனர். 


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுக, பாஜக பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னிலை வகிக்கிறது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாகன வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதை நிலவரப்படி தமிழகத்தில் 38 தொகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக விருதுநகர் தொகுதியிலும், பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக வேட்பாளர் தருமபுரி தொகுதியில் முன்னிலையில் இருந்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: ADMK vs BJP : 11 தொகுதியில் அதிமுகவை 3ஆம் இடத்திற்கு தள்ளிய பாஜக.! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

பாஜக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான இடங்களில் அதிமுகவை விட பாஜக 12க்கும் மேற்பட்ட தொகுதியில் 2வது இடத்தை பிடித்துள்ளது. 

இதையும் படிங்க:  நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பின்னடைவு! அதிமுகவை முந்திய நாம் தமிழர் கட்சி!

அதேபோல் தமிழகத்தில் உள்ள 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3 -வது இடத்தில் உள்ளனர். அதாவது, புதுச்சேரி, திருநெல்வேலி, கரூர், ஈரோடு, நாகை, நாமக்கல், கன்னியாகுமரி ஆகிய 8 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3 -வது இடத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் அதிமுக, பாஜகவை முந்தி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.     

click me!