மே 4 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு மது கடைகளை மூடுங்கள்.! திடீர் கோரிக்கை வைத்த பாஜக.! என்ன காரணம் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Apr 25, 2023, 9:48 AM IST

சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் மே 4ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
 


மதுரை சித்திரை திருவிழா

உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசித்திபெற்றதாகும்.  15 நாட்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்.  கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவை பொறுத்தமட்டில் மே 4ஆம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், மே 5 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது  நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். 

Tap to resize

Latest Videos

சித்திரை திருவிழா; யாராக இருந்தாலும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி - ஆய்வு கூட்டத்தில் அதிரடி

மதுக்கடைகளை மூடுங்கள்-பாஜக

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பக்தர்கள் வருகை, வாகன தடை ,தண்ணீர் திறப்பு, மேடை அமைப்பு, காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மே 5ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விழாவிற்கு வருகை தருவதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், பெண்களின் பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டத்தில் மே 4ம் தேதி முதல் மே 9ம் தேதி மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைக்க வேண்டும் என மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகாசுசிந்திரன் தலைமையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்

குட்நியூஸ்.. மே 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
 

click me!