கையில் மையுடன் வந்தால் தள்ளுபடி! பிரியாணி கடையில் அலைமோதிய வாக்காளர்கள் கூட்டம்!

By SG Balan  |  First Published Apr 20, 2024, 10:09 PM IST

சுடச்சுட 10 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைத்த சூடான பிரியாணியை பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.


வாக்களித்துவிட்டு கையில் மையுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் உணவகத்தில் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் பிரியாணி வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் சலுகை விலை பிரியாணியை வாங்கிச் சென்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. முதல் கட்ட வாக்குபதிவிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது முடிந்தது. இந்தத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

Tap to resize

Latest Videos

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்கு செலுத்திவிட்டு, விரல்களில் வைக்கப்படும் அழியாத மையுடன் செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களுக்குச் சென்றால் சிறப்புச் சலுகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. கையில் மை இருப்பதைக் காண்பித்து 5% தள்ளுபடி வழங்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் கூறியது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு 69.46%: தொகுதி வாரியாக முழுமையாக அறிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம்

மாவட்ட உணவக உரிமையாளர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வாக்குப்பதிவு செய்துவிட்டு வரும் மக்களுக்கு உணவகங்களில் 5 சதவீத தள்ளுபடியில் உணவு வழங்கப்பட்டு வந்தது. மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பிரியாணி கடையில் அரசு அறிவித்த 5% சலுகையுடன் மேலும் 5 சதவீதம் தள்ளுபடியுடன் பிரியாணி விற்பனை நடைபெற்றது.

சுடச்சுட 10 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைத்த சூடான பிரியாணியை பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். வாக்கு செலுத்தியதற்குச் சான்றாக கையில் மை வைக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து, மை இருந்தால் மட்டும் இந்தச் சலுகை கொடுக்கப்பட்டது.

இதனிடையே, தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தருமபுரியில் அதிகபட்சமாக 81.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. கள்ளக்குறிச்சியில் 79.25% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் 53.91 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உங்க மொபைல் ஓவர் ஹீட் ஆகுதா? கண்டிப்பா இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க!

click me!