
சென்னை திருவான்மியூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை நடத்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்து வருகிறார்.
2015 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திருவான்மியூரில் நடத்தினார்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சொந்தமான இந்த இடத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அமர இடவசதி உள்ளது.
ஜெயலலிதா பொதுக்குழு நடத்திய போது இந்த இடத்தில் கல்யாண மண்டபம் கட்டபடாமல் இருந்தது. தற்போது மிகப்பெரிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை நடத்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இந்த இடத்தை ஆய்வு செய்தார். அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் ஆகியோரும் ஆய்வு செய்தனர்.