விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிவாரணம் - வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 
Published : Apr 24, 2017, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிவாரணம் - வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சுருக்கம்

Crop Insurance relief for farmers by Chief Minister Edappadi Palinasamy

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிவாரணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே நிதி ஆயாக் கூட்டத்தில் கலந்து டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விவசாயிகளை சந்தித்து பேசினார்.

அப்போது மத்திய அரசு உதவாவிட்டாலும் தமிழக அரசு உதவும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

இதைகேட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிவாரணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

2016 - 2017 ஆம் ஆண்டில் 15 லட்சத்து 35 ஆயிரம் பேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

முதல் கட்டமாக 30 விவசாயிகளுக்கு மட்டும் பயிர் காப்பீடு நிவாரணம் வழங்கபட்டது.

தகுதி உள்ள பயனாளிகளுக்கு இன்னும் 2 மாதங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும் எனவும்  412 கோடி ரூபாய் தமிழக அரசின் சார்பில் காப்பீடு நிறுவனங்களுக்கு மானியம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!