
ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 61 துறைகளை சேர்ந்த அரசு துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
மே 2 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் என அரசு ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஏற்கனவே நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே விவசாயிகள் பிரச்சனை, உட்கட்சி பூசல், நெடுஞ்சாலை டாஸ்மாக் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் அடுத்தடுத்து எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் கையில் எடுத்திருக்கும் இந்த போராட்டம் சரிவின் விளிம்பில் இருக்கும் எடப்பாடி அரசுக்கு மேலும் தலைவலியை உண்டாக்குகிறது.