திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (48). இவரது மகள் சந்திரலேகா (27) என்பவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு காயமின்றி காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (48). இவரது மகள் சந்திரலேகா (27) என்பவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆஞ்சிநேயன் சந்திரலேகா மற்றும் 3 மாத கை குழந்தையை மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.
இதையும் படிங்க;- இந்த வருட தீபாவளிக்கு 600 கோடி டார்கெட்.. டாஸ்மாக் மது விற்பனையை தட்டி தூக்குவார்களா மதுப்பிரியர்கள்!
வேலூர் - கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஆஞ்சிநேயன், சந்திரலேகா தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தனர். சந்திரலேகா தனது கையால் குழந்தையை கீழே விழாமல் மார்போடு அணைத்துக்கொண்டு எந்த வித காயமின்றி காப்பாற்றினார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆஞ்சிநேயன், சந்திரலேகாவை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சந்திரலேகாவை தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சந்திரலேகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- அமெரிக்காவில் தற்கொலை செய்த மகன், மருமகள்.. 2 வயது பேரன் வேண்டும் - வயதான தம்பதி கோரிக்கை