கொடூர சாலை விபத்து... அந்தரத்தில் பறந்த 3 இளைஞர்கள் உயிரிழப்பு!

By vinoth kumar  |  First Published Jan 25, 2019, 6:00 PM IST

குடியாத்தம் ரயில்வே மேம்பாலத்தின் இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 



குடியாத்தம் ரயில்வே மேம்பாலத்தின் இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பள்ளிகொண்டா செல்லியம்மன் நகரை சேர்ந்த ஜெயசீலன் மகன் பிரதீப் (வயது 20), பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சரவணன் மகன் நவீன் (20), அய்யாவூ நகரை சேர்ந்த சேட்டு மகன் அபிநாஸ் (20) ஆகிய 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்புச்சுவரில் பலமாக மோதியது. 

Tap to resize

Latest Videos

இவர்கள் அந்தரத்தில் பறந்த படியே 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். இவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி இருந்த நிலையில் உடனே 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!