ஆசிரியரையே ராகிங் செய்த பள்ளி மாணவர்கள்... 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்..!

By vinoth kumarFirst Published Jan 22, 2019, 5:41 PM IST
Highlights

திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களை கேலி செய்த மாணவர்கள் 6 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களை கேலி செய்த மாணவர்கள் 6 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த வருடம் பள்ளிக்கு தாமதமாக வந்த பிளஸ் 1 மாணவர்களை கண்டித்த தலைமை ஆசிரியரை அந்த மாணவர்கள் கத்தியால குத்தினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட அவர்கள் தற்பொழுது அதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்கள். 

இந்நிலையில் பொருளியில் ஆசிரியரை 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவரை நாற்காலியில் உட்கார விடாமல் வம்பிழுத்தும் அட்டகாசம் செய்து எடுத்த வீடியோவை டப்மேஸ் செய்து இரு வாரங்களுக்கு முன் வெளியிட்டனர். 

ஆசிரியர்களை மாணவர்களே கேலி செய்யும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து ஆசிரியரை கேலி செய்த மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

click me!