பெள்ளி தம்பதியை எதிர் நோக்கி குட்டி யானை; யானையின் பிரிவால் கதறி அழுத வன ஊழியர்

By Velmurugan sFirst Published Mar 17, 2023, 4:51 PM IST
Highlights

தர்மபுரி மாவட்டத்தில் விவசாய கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குட்டி யானை பெள்ளி பொம்மன் தம்பதியிடம் ஒப்படைக்க அழைத்துச் செல்லப்படும் நிலையில், யானையை 5 நாட்களாக பராமரித்த வன ஊழியர் யானையின் பிரிவால் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள போடூர் கட்டமடுவு கிராமத்தில் சுமார் 30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் குட்டி யானை ஒன்று கடந்த 11ம் தேதி தவறி விழுந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர்  குட்டி யானையை  கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டனர். 

குழந்தைகளிடம் பாசம் காட்டாத மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது

மீட்கப்பட்ட நான்கு மாத குழந்தை குட்டி யானையை வாகனம் மூலம் ஒகேனக்கல் அடுத்த சின்னாறு வனப்பகுதியில் யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. ஆனால், காட்டு யானை கூட்டத்துடன் சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதுமலை சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொம்மன் - பெல்லி தம்பதியினரிடம் வளர்ப்பதற்காக ஒப்படைக்கப்பட உள்ளது. 

இதற்காக பெண்ணாகரம் ஒட்ரபட்டி வனப்பகுதியில் இருந்து யானை குட்டி வாகனத்தில் ஏற்றப்பட்ட பொழுது ஐந்து நாட்களாக இரவு பகல் என்று தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்த வன ஊழியர் மகேந்திரன் யானை குட்டி தன்னிடமிருந்து பிரிந்து சென்ற துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார். யானை குட்டி யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த சோகம் ஒருபுறம் இருக்க, ஐந்து நாட்கள் தன்னுடன் இருந்த குட்டியை பிரிய முடியாமல் வன ஊழியர் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

click me!