முன்பகையால், வீட்டை தீ வைத்து கொளுத்தியவர் கைது: வீடு கருகி நாசம்…

 
Published : Mar 06, 2017, 10:03 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
முன்பகையால், வீட்டை தீ வைத்து கொளுத்தியவர் கைது: வீடு கருகி நாசம்…

சுருக்கம்

Before being set on fire the house arrest was scorched and ruined house ...

காரைக்குடியில் முன்பகை காரணமாக, வீட்டைத் தீ வைத்துக் கொளுத்தியவரை காவலாளர்கள் கைது செய்தனர். தீ வைத்ததில், வீடு கருகி நாசமானது.

காரைக்குடி மாவட்டம், மித்ராவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கரந்தமலை (53). அதே பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (36).

இருவரும் விவசாய வேலை இல்லாத நேரங்களில், குளங்களிலிருந்து தாமரைப் பூக்களை பறித்து விற்று வந்தனர்.

இதில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கைகலப்பு ஏற்பட்டு கரந்தமலையை தாக்கியுள்ளார் நாராயணன். மேலும், மிரட்டலும் விடுத்துள்ளார். 

இந்த நிலையில், கரந்தமலை குடும்பத்துடன் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தார். திருவிழாவை முடித்துவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது, வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கரந்தமலை, உடனே, அப்பகுதியினர் உதவியுடன் தீயை அணைத்துள்ளார்.

எனினும், வீட்டிலிருந்த பணம், நகைகள் மற்றும் ஆவணப் பொருள்கள் தீயில் கருகிவிட்டன.   

பின்ன்னர், இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் கரந்தமலை புகார் அளித்தார்.

அந்த புகாரில், “நாராயணனுக்கும், எனக்கும் இருந்த முன்விரோதத்தால் அவர் இந்த செயலை செய்திருக்க கூடும்” என்று சந்தேகம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

அந்த புகாரின்பேரில், காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து, நாராயணனை விசாரணைக்காக கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கு ரெடியா?.. 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'.. தேதி குறித்த அரசு!
பேச்சுவார்த்தையில் ஏமாற்றம்.. ஜன. 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி!