ஆவின் பாலகத்தில் பீர் விற்பனை? சோதனையில் சிக்கியது பீர்பாட்டில்கள் பெட்டி…

 
Published : Jun 30, 2017, 08:19 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
ஆவின் பாலகத்தில் பீர் விற்பனை? சோதனையில் சிக்கியது பீர்பாட்டில்கள் பெட்டி…

சுருக்கம்

Beer sale in Aavins milk shop

வேலூர்

வேலூரில் உள்ள ஆவின் பாலகத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பீர்பாட்டிகள் அடங்கிய பெட்டியைக் கண்டுபிடித்தனர். ஆவின் பாலகத்தில் பீர் விற்கப்படுகிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகள், உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில் மூடப்பட்டதால் குடிகாரர்கள் வெகுதூரம் சென்று சாராயம் குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மூடப்பட்ட கடைகளை மற்ற இடங்களில் திறப்பதற்கு மக்கள் பக்கத்தில் கடுப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே சிலர் சாராயக் கடைகளில் சாராயங்களை மொத்தமாக வாங்கி சில்லரைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் ஏற்கனவே மூடப்பட்ட கடைகள் இருந்த இடங்களில் சாராயங்கள் தாராளமாக கிடைக்கிறது.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கௌரிசுந்தர், கொளஞ்சி, ராஜேஷ், நாகேஸ்வரன் ஆகியோர் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் பாலின் தரம் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு 12 பீர்பாட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பீர்பாட்டில்கள் குறித்து கடை விற்பனையாளரிடம் விசாரணை நடத்தினர்.

அதற்கு அவர், “ஒருவர் வாங்கிவந்து வைத்துவிட்டுச் சென்றதாக தெரிவித்தார். இதுகுறித்து டாஸ்மாக் சாராயக் கடை மேலாளருக்கு, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்து பீர்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து டாஸ்மாக் சாராயக் கடை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!