
நீலகிரி
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் காவலாளர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வேண்டிகொண்டார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனையொட்டி மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை, உதகை நகராட்சி சார்பில் போக்குவரத்தையும், வாகன நெரிசலையும் கட்டுப்படுத்த பல்வேறு விதமான உத்திகள் புதிதாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எதிர்வரும் கோடை சீசனையொட்டி போக்குவரத்துப் பிரச்சனைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது அவர், "நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் காவலாளர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இங்குள்ள பலரும் தங்களுக்கு உதவும் வகையில் நடந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டுவதில் முறையாக நடந்து கொள்ள வேண்டும்.
கனிவான நடத்தை, கனிவான பேச்சு மூலமாக நீலகிரி காவலாளர்களின் பெருமை பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.