போலீஸ் பேரு கெட்டுப் போச்சு.. பொதுமக்களிடம் ஓவர் சீன் வேண்டாம்... லெப்ட் ரைட் வாக்கிய டிஜிபி சைலேந்திரபாபு.

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2022, 12:34 PM IST
Highlights

காவல்துறையிடம் புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிருப்தி காட்டக்கூடாது என தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்

காவல்துறையிடம் புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிருப்தி காட்டக்கூடாது என தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல் துறைக்கு அவர் அறிவுரை கூறி சுற்றறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள விவரம் பின்வருமாறு:- பொதுமக்கள் தங்கள் பிரச்சனைக்காக தீர்வு தேடி காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் கொண்டுவரும்போது அதை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கனிவுடன் அணுகவேண்டும்.

இதையும் படியுங்கள்: இசுலாமியர்கள் மீது ஏன் வன்மம்.? தலைமை செயலகத்தை சுற்று போடும் அன்சாரி.. ஆதரவாக துள்ளி குதித்து வந்த கருணாஸ்.

பொது மக்களிடம் தங்கள் அதிருப்தியை காட்டக்கூடாது, மேலும் சில காவல்துறையினர் அதிகாரத்தின் உச்சத்தில் தாங்களே இருப்பதாகவும் தாங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற மன நிலையில் இருப்பதாகவும் டிஜிபி கருத்து தெரிவித்துள்ளார். இது போன்ற எதிர்மறையான அணுகுமுறை காரணமாக சில காவல்துறையினர் புகார் அளிக்க வரும்  பொதுமக்களை நேரடியாகவே வசைபாடும் சூழலில் இருந்து வருகிறது, இது பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். எந்த ஒரு துறையிலும் சரியான அணுகுமுறை இருந்தால் மட்டுமே அதிகாரிகளால் தங்கள் இலக்குகளை அடைய முடியும்.

இதையும் படியுங்கள்: நான் தமிழ் கற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது... அழகான மொழிதான், ஆனா ரொம்ப கஷ்டமாச்சே.. ராகுல் காந்தி.

எந்த ஒரு பதவியும் அதிகாரத்திற்கானது அல்ல, அது மக்களுக்கு சேவையாற்றுவதற்கானது என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். காவல்துறையினரே இறுதி அதிகாரம் படைத்தவர்கள் அல்ல என்பதை காவல்துறையினர் உணர்ந்து செயல்பட வேண்டும். கேள்வி கேட்பதற்கு தங்களுக்கு மேல் அதிகாரிகள் இருக்கிறார்கள்.  நீதிமன்றம் ஆணையங்கள் இருக்கிறது என்பதை அறிந்து நடக்க வேண்டும், எனவே காவல்துறையினர் இது போன்ற எதிர்மறையான அணுகு முறைகளை கைவிட்டு அதற்கு பதிலாக பொது மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து தங்களால் முடிந்த அளவுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

தங்களின் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரியிடம் விளக்குவது போன்ற நேர்மறையான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் அதேபோன்று உயர் அதிகாரிகளும் தங்களுக்கு கீழ் பணியாற்றும் காவல்துறையினருக்கு நேர்மறை அணுகுமுறைகள் குறித்து பயிற்சிகளை தொடர்ந்து வழங்க வேண்டும் இனிவரும் காலங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மத்தியில் இடவும் காவல்துறையினர் எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டு நேர்மறை  அணுகுமுறைகள் வேண்டும் சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

 

click me!