ஷாக்கிங் நியூஸ்.. தனியாளாக தாயின் இறந்த உடலை சக்கர நாற்காலியில் எடுத்து சென்ற மகன்.. ஏன் தெரியுமா?

By vinoth kumarFirst Published Sep 10, 2022, 12:23 PM IST
Highlights

திருச்சியில் இறந்த தனது தாயின் உடலை எரிப்பதற்காக மின்தகன மையத்திற்கு சக்கர நாற்காலியில் வைத்து மகன் எடுத்துச் செல்லும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

திருச்சி, மணப்பாறையில் இறந்த தனது தாயின் உடலை எரிப்பதற்காக மின்தகன மையத்திற்கு சக்கர நாற்காலியில் வைத்து மகன் எடுத்துச் செல்லும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

எலக்ட்ரீசியனாக இருக்கும் முருகானந்தம் தனது தாயின் இறந்த உடலை சக்கர நாற்காலியில் ஏறக்குறைய இரண்டரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி வந்துள்ளார். அந்த நபர் தனது தாய் தோல் அழற்சியால் பாதிக்கப்பட்டதாகவும், யாரும் தனக்கு உதவ மாட்டார்கள் என்று நினைத்ததாகவும் மின்தகன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், இறுதிச்சடங்கு செய்வதற்கு தன்னிடம் நிதி இல்லை என்றும் முருகானந்தம் கூறியுள்ளார். இவருக்கு பதில் அளித்த மாநகராட்சி ஊழியர்கள், இதற்காக வருத்தப்பட வேண்டாம் என்றும், அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறது என்று முருகானந்திடம் தெரிவித்தனர். மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

இறந்த பெண் ராஜேஸ்வரி (84), தோல் அழற்சியால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.  ராஜேஸ்வரியின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து கடந்த புதன் கிழமை அவரது குடும்பத்தினருக்கு மருத்துவர் தகவல் கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சையைத் தொடரவும் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில், 84 வயதான ராஜேஸ்வரி இறந்தார்.

அதன் பின், அவரது மகன் முருகானந்தம், பெண்ணை துணியில் போர்த்தி, சக்கர நாற்காலியில் சுடுகாட்டிற்கு எடுத்துச்  சென்றுள்ளார். சுடுகாட்டில் இருந்த மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவமனை ஆவணங்களை சரிபார்த்து, பெண் மருத்துவரிடம் ஆலோசனை நடத்தி இறப்புச் சான்றிதழை முருகானந்தம் வாங்க உதவினர். உள்ளூர் லயன்ஸ் கிளப் யூனிட் அறங்காவலரும், முன்னாள் ராணுவ வீரருமான என். ஸ்ரீதரன், ராஜேஸ்வரியின் உடலை தகனம் செய்ய உதவினார்.

இதுகுறித்து ஸ்ரீதர் இந்தியா டுடேவுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''காலை 6 மணிக்கு எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. சுடுகாட்டுக்கு அருகில் உள்ள டீக்கடை வியாபாரி ஒருவர் பேசினார். சக்கர நாற்காலியில் உடலை வைத்துக் கொண்டு மின்தகன வாயிலுக்கு வெளியே ஒருவர் காத்திருப்பதாக தெரிவித்தார். நான் உடனடியாக தகன கூடத்திற்குச் சென்று அவரிடம் கேட்டேன். ஏன் சக்கர நாற்காலியில் அழைத்து வந்தீர்கள் என்று கேட்டேன். 

“அன்று அதிகாலை 4.30 மணியளவில் இவரது தாயார் இறந்துள்ளார். தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து இருப்பதால், இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவும் என்பதால், யாரும் உதவ முன் வருவார்களா என்று தெரியவில்லை என்று  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அஞ்சிய அவர் தனது தாயை சக்கர நாற்காலியில் மறைத்து, தனது குடியிருப்பில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு தள்ளிக் கொண்டு வந்துள்ளார். 

“இறந்த பெண்ணின் மருத்துவ ஆவணங்கள் அனைத்தையும் அவரிடம் இருந்தது. மணப்பாறையைச் சேர்ந்த மருத்துவரை அழைத்து விசாரித்தேன்.  பின்னர் இறந்த பெண்ணின் உடலை சுத்தம் செய்து, ஆடைகள் போர்த்தி, இந்து முறைப்படி எடியூட்டினோம்'' என்று தெரிவித்துள்ளார்.

click me!