ஷாக் கொடுத்த வங்கி ஊழியர்கள்... நான்கு நாட்கள் முடங்கும் வங்கி சேவைகள்!!

By Narendran SFirst Published Jan 18, 2023, 11:35 PM IST
Highlights

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளதால் வங்கி சேவை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளதால் வங்கி சேவை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, பென்சன் உயர்வு, வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, வங்கி சேவைக்கு தேவையான ஊழியர்கள் தேர்வு, வங்கிகளின் வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வேலை நிறுத்தம் நடத்த போவதாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

ஏற்கனவே  பொங்கல் விடுமுறையால் 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கிய நிலையில் வரும் ஜன.30, 31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஜன.28,29 ஆகிய தேதிகள் வங்கி விடுமுறை என்பதால் வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் வங்கி சேவைகள் தொடந்து 4 நாட்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில், வர்த்தக நிறுவனங்கள், சிறு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்படுவர். இதுக்குறித்து பேசிய அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாஜலம், வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் எதிரொலி... அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்!!

அதனால் போதுமான அளவிற்கு ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு காணாவிட்டால் திட்டமிட்ட படி வேலை நிறுத்தம் நடைபெறும். 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடும் நிலை ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் கடுமையாக  பாதிக்கப்படுவார்கள். மாத இறுதிநாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால், காசோலை பரிவர்த்தனை பல ஆயிரம் கோடி மதிப்பில் தேங்கும் என்று தெரிவித்துள்ளார்.

click me!