கவனத்திற்கு !! வரும் 27 ஆம் தேதி வங்கி ஸ்டிரைக்.. நாடுமுழுவதும் 7 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம்..

Published : Jun 13, 2022, 04:04 PM ISTUpdated : Jun 13, 2022, 04:06 PM IST
கவனத்திற்கு !! வரும் 27 ஆம் தேதி வங்கி ஸ்டிரைக்.. நாடுமுழுவதும் 7 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம்..

சுருக்கம்

நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.  

வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல், நிலுவையில் உள்ள இதர பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க: புல்டோசர் எங்கப்பா காணோம்? பா.ஜ.க.வை தெறிக்க விட்ட கார்த்தி சிதம்பரம்..!

அதன் படி வரும் 25ம் தேதி நான்காவது சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், இரண்டு நாட்கள் வார விடுமுறை ஆகும். அடுத்த நாளான திங்கள்கிழமை வேலை நிறுத்தம் என்பதால், அன்று பரிவர்த்தனைகள் நடைபெறாது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்ததால் தொடர்ந்து மூன்று நாள்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

நாடு முழுவதும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்படவுள்ளனர். தங்களது கோரிக்கைகளை  வங்கி நிர்வாகமும், அரசும் கண்டு கொள்ளும் வரை போராட்டம் தொடருமென்று சங்கங்கள் தெரிவித்துள்ளன.இதனால் நாடுமுழுவதும் வங்கி தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பொருளாதாரத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட வாயுப்புள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை..! இன்கம்டாக்ஸ் மூலம் என்னை மிரட்ட முடியாது- கமல் ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Petrol Diesel Price Hike: அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.
Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!