நீலகிரியில் பைக்கிற்கு பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்

By Dinesh TG  |  First Published Oct 3, 2022, 2:14 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ரஞ்சித் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தின் மீது கொண்ட அதீத காதலால் இருசக்கர வாகனத்திற்கு குடும்பத்துடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
 


நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள  பந்தலூர் பகுதியில் வசிப்பவர் ரஞ்சித் என்ற இளைஞர். அருகில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இருசக்கர வாகனங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த ரஞ்சித் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு yamaha R15 என்ற இருசக்கர வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார் .

Tap to resize

Latest Videos

அந்த வாகனத்திற்கு பால்டோ என பெயர் சூட்டி தனது உடன் பிறந்த சகோதரர் போல அந்த வாகனத்தை பராமரிப்பு செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த இரு சக்கர வாகனம் வாங்கி இன்று இரண்டாவது வருடம் என்பதால் அவர்கள் வீடு முன்பாக அலங்காரம் செய்து அந்த வாகனத்தை சுத்தம் செய்து வாகனத்தின் பெயரோடு கேக்கை வாங்கி வந்து வாகனம் முன்பாக ஹெல்மெட் அணிந்து கேக் வெட்டி அந்த வாகனத்திற்கு ஊட்டி மகிழ்ந்தார்.

இருசக்கர வாகனத்திற்கு அவர் மட்டுமின்றி அவர் குடும்பமே பிறந்தநாள் கொண்டாடியது நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

காலேஜ் கேல்ஸ் முன்னாள் கெத்து காட்ட நினைத்து பொத்துன்னு தலைகுப்புற விழுந்த இளைஞர்.. 3 பேர் மீது போலீஸ் ஆக்‌ஷன்


 

click me!