
சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் இன்று காலை ஒருவர் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் கின்னஸ் சாதனைக்காக ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இன்று நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டில் 500 காளைகளும் 1000 மாடுபிடி வீரர்களும் ஏராளமான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
இன்று காலை போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென ஒரு காளை பார்வையாளர்களின் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதில் ஆலங்குடியை சேர்ந்த திருநாவுகரசர் என்பவர் மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், தற்போது காளை முட்டியதில் பாஸ்கரன் என்ற மேலும் ஒருவர் பலியாகி இருப்பது எம்.புதூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.