சென்னையில் காற்றாடி , மாஞ்சா நூல் விற்க தடை - காற்றாடி விற்பனையாளர்கள் மனு தள்ளுபடி

First Published Nov 4, 2016, 7:59 AM IST
Highlights


சென்னையில் தாங்கள் சுதந்திரமாக காற்றாடி விற்க போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காத்தாடி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதை எதிர்த்து சென்னை காற்றாடி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக காற்றாடி விற்பனையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், காற்றாடி விற்பனை செய்வதில் காவல்துறை தொடர்ந்து தலையிட்டு வருகின்றனர் என்றும். தாங்கள் பல வருடமாக இந்த தொழிலை செய்து வருவதாகவும்.

குஜராத் ,ராஜஸ்தான் ,மகாராஷ்ரா போன்ற மாநிலத்தில் இந்த தொழிலை செய்வதற்கு வங்கி கடனே வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களுடைய சங்கம்  மாஞ்சா நூல் விற்பனை செய்வதில்லை என்றும் இது தொடர்பாக தங்களுடைய சங்கம் தீர்மானம் கூட நிறைவேற்றி உள்ளது. ஆனாலும்  எங்கள் சங்க உறுப்பினர்களால்  விற்கப்படும் காற்றாடிகளை காவல்துறை பறிமுதல் செய்வதாகவும்,  பொய் வழக்கு போடுவதாகவும்  இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு கொடுத்தும் நடவடிக்கை  எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ராஜந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது காவல்துறை சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் காற்றாடி விற்பனையுடன்  கூட மஞ்சா நூலும்  விற்பனை செய்வதாகவும் , இது வரை 15க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு இருப்பாதகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாஞ்சா நூலால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் உயிரிழந்தது குறித்தும் பதிவுசெய்யப்பட்டது. 

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ராஜேந்திரன் காற்றாடி விற்பனையாளர் சங்கத்தின் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.

click me!