
மின்சாரத்துறையின் துறையின் கவனக்குறைவால் தோட்டத்தில் தாழ்வாக தொங்கி கொண்டு இருந்த மின் கம்பியில் பாய்ந்த மின்சாரத்தால் சேகர் (55)என்ற விவசாயி உயிரிழந்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு
திருத்தணி அடுத்த தாசிரேட்டி கண்டிகை என்னும் கிராமத்தில் வசிக்கும் சேகர் என்பவர் தனது நிலத்தில் பூ செடி வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் சேகர் பூ பறிக்க தனது தோட்டத்திற்கு சென்றார் . இவர் சென்ற சிறிது நேரத்தில் இவரது மனைவி மற்றும் வேலை ஆட்களும் பூ பறிக்க அங்கு போனபோது சேகர் தனது தோட்டத்தில் மின் கம்பி தாழ்வாக போகும் இடத்தில் விழுந்து கிடந்தார் .
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அங்குள்ள மின் கம்பியை கவனிக்காமல் மயங்கிய நிலையில் இருந்த சேகரை நெருங்கினார். அப்போது தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததை தெரிந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மின்சாரத்தை நிறுத்திவிட்டு சேகரை காப்பாற்ற நேரம் ஆனதால் விவசாயி சேகர் தனக்கு சொந்தமான பூந்தோட்டத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இந்த சம்பவத்திற்கு காரணமான மின்சார கம்பி தாழ்வாக தொங்கிக்கொண்டு இருந்தே.
மின் கம்பி குறித்து பலமுறை மின்சாரத்துறை அதிகாரிக்கு புகார் அளித்தும் அதனை கண்டுக்கொள்ளாததால் தான் இவ்வாறு நடந்ததாக கூறி , சம்பவத்தை குறித்து ஆய்வு செய்ய வந்த மின்சாரத்துறை அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
. இதற்கான உரிய காரணம் தெரியாமல் உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர் . உடனே அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகின்றனர்