108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரைக் உயர்நீதிமன்றம் தடை - போராட்டம் சட்டவிரோதம் என அறிவிப்பு

First Published Oct 27, 2016, 7:23 AM IST
Highlights


கடந்த மூன்று ஆண்டுகளாக 25% போனஸ் கேட்டு வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு வேலை நிறுத்தம் செய்ய நீதிமன்றம் தடை வித்தது. இதை மீறி இந்த ஆண்டும் வேலை நிறுத்தம் அறிவித்தனர். இது சட்ட விரோதம் என கூறிய உயர் நீதிமன்றம் தீபாவளி இரவு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடத்தவிருந்த போராட்டத்திற்கு தடை வித்தது.

 8 மணி நேர வேலை, 25% சதவிகித போனஸ் வேண்டும் என்பது உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜி.வி.கே - ஈ.எம்.ஆர்.ஐ. நிர்வாகத்துடன் ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந் நிலையில், தீபாவளியை கணக்கில் கொண்டு அக்டோபர் 28-ஆம் தேதி இரவு 8 முதல் 29-ஆம் தேதி இரவு 8 மணி வரை சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அக்டோபர் 18ஆம் தேதி அறிவித்துள்ளனர்.

சேவை நிறுவனம் என்பதால் போனஸ் சட்டத்துக்கு உள்பட்டது இல்லை என்றாலும், ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கக் கூடாது என்பதற்காக 3 ஆண்டுகளாக ஊக்கத் தொகையை வழங்குவது போல, இந்த ஆண்டு 5,300 ரூபாய்  வழங்கப்பட்டாலும், 25 சதவீதம் கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஜிவிகே இஎம்ஆர்ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் விதித்திள்ள தடையையும் மீறி, வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் பேட்ரிக் என்பவர் பொது நல வழக்கு தொடர்வதற்காக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல் அமர்வில் முறையீடு செய்தார்.

 இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பேட்ரிக் ஆஜராகி தீபாவளி நேரத்தில் பட்டாசு விபத்துகள் ஏற்படும். அப்போது அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை அத்தியாவசியமானது. 

இந்தநிலையில் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் உயிர்பலி ஏற்படும். எனவே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி ஆம்புலன்ஸ் நிறுவனத்துடனும், ஊழியர்கள் சங்கத்துடனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், கடந்த ஆண்டு உத்தரவுப்படி சேவை நிறுவனமான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே உத்தரவும் தற்போது தற்போது பிறப்பிக்கபடுகிறது. எனவே இந்த ஆண்டும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டனர்.

click me!