
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30ம் தேதி முதல் தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
'கியான்ட் புயல்' மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளதாகவும், இந்த புயல் மத்திய மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக மீனவர்கள் 3 நாட்களுக்கு ஆந்திர பகுதியை நோக்கி மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 30ம் தேதி முதல் தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 39 செ.மீ.முதல் 44 செ.மீ. வரை இயல்பான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.