
ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் திடலில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுடப்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களுக்கான அத்தியவாசிய தேவைக்காக வேலை செய்யும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அரசு பணிகளில் மற்ற ஊழியர்கள் போன்று 8 மணி நேரம் வேலை வேண்டும்.
ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில், தேனி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.