‘பெற்ற மகளையே கற்பழித்த கொடூர தந்தை’..!! - ‘ஆயுள் தண்டனை’ வழங்கிய நீதிபதி

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 04:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
 ‘பெற்ற மகளையே கற்பழித்த கொடூர தந்தை’..!! -  ‘ஆயுள் தண்டனை’ வழங்கிய நீதிபதி

சுருக்கம்

கரூரில் பெற்ற மகளையே கற்பழித்த தந்தைக்கு ஆயுள் தண்டணை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது

 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் திருக்காம்புலியூர் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி  கணேசன். இவரது மகள் பாலாமணி. இவர் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள முள்ளு காட்டில் பாலாமணி ஆடு மேய்து கொண்டிருக்கும் போது அவரது தந்தை கணேசன் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதைதொடர்ந்து தாய்மாமன் ராஜலிங்கம் பாலாமணியை தனது வீட்டிற்கு உணவருந்த அழைத்து சென்று அவரது வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து பாலாமணி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது தாயும் எதுவும் கூறாததால், பாலாமணி இந்த சம்பவம் குறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசன் மற்றும் ராஜலிங்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முதல் குற்றவாளியான கணேசனுக்கு ஆயுள் தண்டனையும்,ஆயிரம் அபராதமும், இரண்டாவது குற்றவாளியான ராஜலிங்கத்திற்கு 10-ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும் அளித்து உத்திரவிட்டார்.

இதையடுத்து போலீசார் குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு.. அக்கவுண்டுக்கு வரும் பல்க் அமௌன்ட்!
போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை.. பொங்கலுக்கு 5 நாள் லீவு.. மாணவர்கள் குஷியோ குஷி!