"கையில் பணம் இருந்தும் அவதிப்படும் பேச்சுலர்கள்" – ஓட்டல்களில் வாங்க மறுப்பு

 
Published : Nov 10, 2016, 01:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
"கையில் பணம் இருந்தும் அவதிப்படும் பேச்சுலர்கள்" – ஓட்டல்களில் வாங்க மறுப்பு

சுருக்கம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது அரசு அறிவித்ததால், கையில் ஆயிரக்கணக்கில் பணம் இருந்தும், ஓட்டல்களில் சாப்பிட்ட செலவு செய்ய முடியாத நிலையில், பேச்சுளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அறிவித்தார். இதையொட்டி மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கருப்பு பணம், கள்ள நோட்டு ஒழியும் என கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, அந்த பணத்தை வைத்திருந்த மக்கள், சில்லறையாக மாற்ற பல்வேறு கடைகளுக்கு படை எடுத்தனர்.

சிலர் பெட்ரோல் பங்க்குகளிலும், டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனாலும், அங்கேயே போதிய அளவுக்கு சில்லறை இல்லாததால், பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நகைக்கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். இதையொட்டி நேற்று இரவு முதல் இன்று காலை வரை நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சென்னையில் ஏராளமானோர் தங்கி வேலை செய்கின்றனர். இதில் பெரும்பாலானோர் மேன்ஷன்களில் தங்கியுள்ளனர். இவர்களிடம் பணம் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், அவர்களுக்கு சாப்பிட பணம் இல்லை.

குறிப்பாக, வெளியூரில் இருந்து சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள், ஓட்டல்களில் மட்டுமே சாப்பிடுகின்றனர். இவர்களிடம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே உள்ளன. அவர்கள் தங்கியுள்ள மேன்ஷன்களில் சமைக்கும் வசதி கிடையாது. இதனால், அவர்கள் செல்லும் ஓட்டல்களில், ஒரு சில இடத்தில் மட்டுமே, டெபிட் கார்டுகளுக்கு அனுமதி உண்டு.

ஆனால், அத்தியவசிய தேவையான சோப்பு, ஷாம்பு ஆகியவை டெபிட் கார்டு மூலம் வாங்க முடியாது. அதே நேரத்தில் அவர்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுக்களையும், கடைக்காரர்கள் வாங்க மறுக்கின்றனர். பசிக்கு தள்ளுவண்டியில் விற்கப்படும் பழம் வாங்கி சாப்பிடவும் முடியாத அவலநிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், கையில் ஆயிரக்கணக்கில் பணம் இருக்கிறது, வயிற்றில் பசியும் இருக்கிறது, எங்கு சென்றாலும் கடைகளும் இருக்கிறது, வகை வகையான ருசியான பொருட்களும் இருக்கிறது. ஆனால், அதை செலவு செய்தால், கடைக்காரர்கள் வாங்க மறுக்கின்றனர் என புலம்புகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!